ஏலியன்ஸ் கருவி போல் காட்சியளிக்கும் வேக்கம் கிளினர்!

. பிடிப்பதற்கு ஏதுவாக சாஃப் உறையுடன் கைப்பிடி வடிவமைக்கப்பட்டுள்ளது

டைசான் நிறுவனத்திற்கு சொந்தமான, நவீன வேக்கம் கிளினர் பார்ப்பதற்கு வேற்றுக்கிரக வாசிகளின் கருவி போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேக்கம் கிளினர்கள் வீடுகளில் இருக்கும்   அத்தியாவசிய  பொருள்களில் மிக முக்கியமான ஒன்று.  வீடுகளில் உள்ள அறைகள்,  சோஃபா,  கம்பளி  போர்வைகள் ஆகியவற்றில்  பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் ஒட்டிக் கொண்டால் அதை வேக்கம் கிளினர்கள் கொண்டு சுத்தம் செய்து விடாமல். சிறு குழந்தைகளை வைத்திருக்கும் வீடுகளில் கண்டிப்பாக வாரத்திற்கு 1 முறையாவது வேக்கம் கிளினர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயத்தில் நீண்ட ஓயர்கள், பெரிய வடிவிலான  வேக்கம் கிளினர்களை பயன்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படுவதாக இல்லத்தரசிகள் பலர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த கவலையை போக்கும் வகையில்  பிரபல டைசான் நிறுவனம் புதிய வடிவிலான வேக்கம் கிளினர் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  பார்பதற்கு வேற்றுக் கிரகவாசிகளின் கருவி போல் காட்சியளிக்கும் இந்த வேக்கம் கிளினரின் விலை ரூ. 39,990 ஆகும்.  விலைக்கு ஏற்ப, இதில் பல சிறப்மசங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக இதில், எந்தவித ஒரு ஓயர்களும் இணைக்கப்படவில்லை. சிங்கிள் பேட்டரி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பிடிப்பதற்கு ஏதுவாக சாஃப் உறையுடன் கைப்பிடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேக்கம் கிளினர்,  பிரபல தனியார் நிறுவனம் நடத்திய, வீட்டுப் பொருட்கள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில்,  இந்த வேக்கம் கிளினரைக் கண்ட  பொதுமக்கள்  சற்று பயத்தில் பின் வாங்கினர். பார்ப்பதற்கு அச்சு அசலாக வேற்றுக் கிரக வாசிகளின் கருவி போலவே காட்சியளிக்கும் இந்த வேக்கம் கிளினர், குழந்தைகளை அதிகளவில் ஈர்த்துள்ளது. அதே போல் ட்டிக்கர் வசதி, ஆட்டோமெட்டிக் வசதி என இல்லத்தரசிகளின்  வேலையை எளிமையாக்கும் பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close