சியோமியின் “தேஷ் கா ஸ்மார்ட்போன்” ஃப்ள்ப்கார்ட்டில் விற்பனை

சியோமியின் துணைத் தலைவர் மற்றும் இந்தியாவின் நிர்வாக இயக்குனருமான மனு ஜெயின், இந்த கைபேசி மக்களின் முன் வெளியிட போவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்

பலரின் ஆர்வத்தை தூண்டிய சியோமியின் “தேஷ் கா ஸ்மார்ட்போன்” ஃப்ளிப்கார்டில் வெளிவர உள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் நவம்பர் 30 இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனை விளம்பரப்படுத்துவதற்காக தனித்துவமாக ஒரு வலை பக்கத்தை உருவாககியுள்ளனர். இதில் கைபேசியின் மொத்த குறிப்புகளை கொடுக்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு கைபேசியின் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தியுள்ளனர். நாம் பார்த்தவரையில் கைபேசி நீண்ட பேட்டரி மற்றும் நாம் அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தும் வகையில் செயலியை கொண்டு அமையும் என்பது தெரிகிறது.

சியோமியின் துணைத் தலைவர் மற்றும் இந்தியாவின் நிர்வாக இயக்குனருமான மனு ஜெயின், இந்த கைபேசி மக்களின் முன் வெளியிட போவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும் இந்நிறுவனம் “தேஷ் கா ஸ்மார்ட்போன்” என அழைத்து இந்த புது வரவுக்கு அதிக எதிர்பார்ப்புகளை இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் ரெட்மி கைபேசியின் பட்டியலில் சீனாவில் பிரபலமாக இருக்கும் ரெட்மி 5எ மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 5எவின் குறிப்புகள்

இந்த ரெட்மி 5எ, 5 அங்குல எச் டி டிஸ்ப்ளே, குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி, 2ஜிபி RAM மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு இந்த கைபேசி அமைந்துள்ளது. மைக்ரோ எஸ்டி மூலம் 128ஜிபி வரை விருத்தி படுத்திக்கொள்ளலாம். பின் பக்கம் 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் முன் பக்கம் 5 மெகா பிக்சல் கேமராவை கொண்டுள்ளது. 3,000mAh பேட்டரி இதில் உள்ளது.

×Close
×Close