Advertisment

2019ல் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் Foldable ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை

ஹூவாய் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை இந்த வருடத்தின் முற்பாதியில் வெளியிட திட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Smartphones Trends 2020

Smartphones Trends 2020

Xiaomi Foldable Smartphone : இந்த வருடம் மூன்று பின்பக்க கேமரா, 48 எம்.பி கேமரா, இன் - ஹோல் செல்ஃபி கேமரா என ஆறு நாட்களிலேயே எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பினை உண்டாக்கியுள்ளது ஸ்மார்ட்போன் இண்டஸ்ட்ரீ. ஏற்கனவே இந்த வருடம், சாம்சங் கேலக்ஸி எஃப் என்ற பெயரில் தன்னுடைய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் சியோமியும் தன்னுடைய புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை உருவாக்கும் முனைப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஈவ்லீக்ஸ் என்ற ட்விட்டர் தளம், புதிதாக வெளியாக இருக்கும் டெக்னாலஜி சம்பந்தமான செய்திகளை லீக் செய்வது வழக்கம். அப்படி லீக்கான வீடியோ ஒன்றில் சியோமியின் 20 நொடி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சியோமியின் புதுவரவாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் காட்டப்படுகிறது.

Xiaomi Foldable Smartphone leaked video

லேப்டாப்பில் இருந்து, ஸ்மார்ட்போனாக மடித்து எடுத்து வைத்துக் கொள்ளுவது போன்று அந்த வீடியோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது.சியோமியும் இது வரை ஃபோல்டபிள் போன்கள் வெளியிடப்படுவதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் இன்று வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் வெளியாக உள்ள ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்

கடந்த நவம்பர் மாதம் தன்னுடைய முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பினை அளித்தது சாம்சங். அதிகப்படியான எண்ணிக்கையில் இந்த போன்கள் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் திரையின் உருவாக்கம் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இந்த வருடம் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் இந்த போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் மட்டுமல்ல, தற்போது ஹூவாய் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய போனை உருவாக்கி வருகிறது. இந்த போன் இந்த வருடத்தின் முற்பாதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்போ மற்றும் லெனோவோ நிறுவனங்களும் ஃபோல்டபிள் போன்கள் உருவாக்கத்தில் அதிக அளவு மும்பரத்துடன் வேலை செய்து வருகிறது. கூகுள் நிறுவனம் பிக்சல் ப்ராண்டின் கீழ் புதிய போனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சர்ஃபேஸ் போன் ஒன்றை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் கடந்த வருடம் நடத்திய ஆண்ட்ராய்ட் டெவலப்பர் மாநாட்டில், புதிதாக வர இருக்கும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை முழுக்க முழுக்க ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். ஆதரிக்கும் என்று கூறியது.

Samsung Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment