Advertisment

நவம்பர் 2 அடுத்த ஸ்மார்ட்ஃபோன் சீரிஸை அறிமுகப்படுத்தும் சயோமி நிறுவனம்: வாங்க தயாராகிவிட்டீர்களா?

அந்நிறுவனம் வெளியிட்ட ஊடக அழைப்பிதழில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ஃபோன்கள், விரைவில் சார்ஜ் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pocophone, Xiaomi

சயோமி நிறுவனம் இந்தியாவில் வரும் நவம்பர் 2-ம் தேதி, ஸ்மார்ட்ஃபோன் தொகுப்பை (Smartphone series) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்ட ஊடக அழைப்பிதழில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ஃபோன்கள், விரைவில் சார்ஜ் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதன்படி, பேட்டரி திறனிலும், சார்ஜ் செய்யும் வசதியிலும் மேம்பட்ட இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களை சயோமி நிறுவனம், நவம்பர் 2-ம் தேதி அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவை அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள, நவம்பர் 2-ம் தேதி வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

சயோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய குறைந்த விலையிலான ரெட்மி ஸ்மார்ட்ஃபோன்கள், இந்திய பயணாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது பெரியளவிலான பேட்டரிதான் ரெட்மி ஃபோன்களின் சிறப்பம்சம். ஆனால், அதிக நேரம் சார்ஜ் நிலைத்திருக்காதது அந்த ஃபோன்களுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

ரெட்மி நோட் 4, ரெட்மி 4, ரெட்மி 3எஸ் உள்ளிட்டவை, சயோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய குறைந்த விலையிலான ஸ்மார்ட்ஃபோன்கள். அவற்றின் விலை ரூ.10,000க்கும் குறைவானதாகவே உள்ளது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சயோமி நிறுவனம், இந்தியாவில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமாகும். இந்தாண்டு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 19 வரையிலான ஒரு மாத காலத்தில், 4 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்கள் இந்தியாவில் விற்பனை செய்திருப்பதாக, அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment