இந்தியாவில் ஜியோமி எம்.ஐ நிறுவனமானது 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி அந்நிறுவனம் சிறப்பு ஆஃபர்களை அறிவித்துள்ளது.
சீன நிறுவனமான ஜியோமி, இந்தியாவில் 3-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களில், ரூ.1 என்ற நம்பமுடியாத விலையில் ஃப்ளாஷ் விற்பனையை அறிவித்திருக்கிறது.
இந்த ஃபிளாஷ் விற்பனையின் போது ரெட்மி 4ஏ, 10000mAh பவர் பேங்க் மற்றும் வை-பை ரிபீட்டர் 2 உள்ளிட்ட பல்வேவேறு சாதனங்களை ரூ.1 என்ற நம்பமுடியாத விலையில் விற்பனைக்கு கொண்டு வருகிறது அந்நிறுவனம்.
இந்த ஃபிளாஷ் விற்பனையில் பங்குபெற விரும்பும் வாடிக்கையாளர்கள் இது குறித்து முதலில் ஷேர் செய்வதன் மூலம் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இதேபோல, ஜியோமி நிறுவனத்தின் தயாரிப்புகளான எம்.ஐ ஏர் பியூரிஃபையர், எம்.ஐ ரவுட்டர், எம்.ஐ ப்ளூடூத் ஹெட்செட், எம்.ஐ வீ.ஆர் ப்ளே ஆகியவையும் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வருகிறது.
கூடுதல் சிறம்பம்சமாக, GoIbibo- நிறுவனமானது ஹோட்டல் புக்கிங் செய்யும் வகையில் ரூ.2000 மதிப்பிலான ஃகிப்ட் வவுச்சரை வழங்குகிறது. மேலும், எஸ்.பி.ஐ வங்கியின் டெபிட் கார்டு மூலம் ஜியோமி நிறுவன பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீத கேஷ்பேக்-ம் உள்ளது. ரூ.8000 என்பது அதில் குறைந்தபட்ச பரிவர்த்தனையாக இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
ஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2, ஜூலை 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஃபோனின் ஹைலைட்ஸ் என்பது அதன் 5,300mAh என்ற அதன் பேட்டரி திறன் தான். அதோடு, 6.44 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 ப்ராசஸர், ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி ஸ்டோரேஜ் போன்ற சிறப்பம்சங்களை இந்த ஃபோன் கொண்டிருக்கிறது.
ஜூலை 27-ம் தேதி முதல் எம்.ஐ மேக்ஸ் 2 விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதற்கு முன்னதாகவே இந்த ஃபோனை வாங்க விரும்ப வேண்டும் என நினைப்பவர்களுக்கும் சிறப்பு ஏற்பாடு உள்ளது. ஆம், எம்.ஐ நிறுவனம் தனது 3-வது ஆண்டின் அடியெடுத்து வைக்கும் விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு விற்பனையை அறிவித்திருக்கிறது. அதன்படி, 20 மற்றும் 21-ம் தேதி நடைபெறும் சிறப்பு விற்பனையில், Mi.com என்ற இணையதளத்திலும், பெங்களூர் வொயிட்ஃபீல்டில் உள்ள எம்.ஐ முதன்மை ஸ்டோரிலும், எ எம்.ஐ மேக்ஸ் 2-வை வாங்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோமி ரெட்மி 4, ரெட்மி 4ஏ, ரெட்மி நோட் 4 ஆகியவை ஜூலை 20-ல் மதியம் 12 மணியளவில் விற்பனைக்கு வருகிறது. மேலும், ஃபிளாஸ் விற்பனையானது ஜூலை 20 மற்றும் 21-ம் தேதிகளில் காலை 11.00 மணி மற்றும் மதியம் 1.00 மணிக்கு தொடங்குகிறது.