scorecardresearch

சினிமாவில் என்ட்ரி… ராஜா ராணி சீரியலில் சித்து தொடர்வாரா?

சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாமல் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த சித்து தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.

சினிமாவில் என்ட்ரி… ராஜா ராணி சீரியலில் சித்து தொடர்வாரா?

கலர்ஸ் தமிழில் வெளியான திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் சித்து. இவர் தற்போது சினிமாவில் நாயகான நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவை விட சின்னத்திரை தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சின்னத்திரையில் பிரபலமாகி சினிமாவில் பிரபல நடிகையாக பலவர் வலம் வருகின்றனர். சினிமாவில் உள்ள காமெடியன்கள் பலரும் தொடக்கத்தில் சின்னத்திரையில் இருந்தவர்கள் தான்.

ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் நாயகனாக நடித்து பிறகு சின்னத்திரையில் சின்னத்தம்பி என்று அழைக்கப்பட்ட நடிகர் பிரஜின்’ தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதேபோல் தற்போது நடிகர் சித்துவும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட நடிகர் சித்து விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து சினிமா வாய்ப்பு பெற்ற அவர், வலிலினம், குற்றம் கடிதல், பீச்சாங்கை. ஒத்தைக்கு ஒத்தை, மதுரை வீரன், அகோரி என ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

ஆனால் அதன்பிறகு சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாமல் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த சித்து தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். சீரியலில் நடித்தாலும் சினிமாவில் ட்ரை பண்ணி வந்த சித்துவுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது சித்து புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளதாகவும், இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதால் சித்து தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா அல்லது விலகுவரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே சந்தியா கேரக்டரில் வந்த ஆல்யா மானசா, வில்லி அர்ச்சனா ரோலில் வந்த அர்ச்சனா என இருவருமே சீரியலில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்க்கது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Uncategorized news download Indian Express Tamil App.

Web Title: %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d %e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf %e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be