Advertisment

8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த முயற்சி... முதல்வர் என்ன செய்யப்போகிறார்?

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் எவ.வேலு கூறுகையில் “ திமுக அரசு 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்த பிறகு இத்திட்டம் தொடர்ந்து அமலுக்கு வரும்” என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த முயற்சி... முதல்வர் என்ன செய்யப்போகிறார்?

ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்று 4 வருடங்கள் முடிந்த நிலையில், முதல்வராகவும் இருக்கும் அவர் முன் முக்கிய திட்டங்கள் தொடர்பான சிந்தித்து முடிவெடுக்கும் சாவல்கள் நிறைந்திருக்கிறது.

Advertisment

தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு , ஆகஸ்ட்டு 28, 2018-ம் ஆண்டு திமுக தலைவராக பொறுப்பேற்றார். மேலும் தற்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. திமுக தலைவராகவும், தமிழக முதல்வராகவும் அவருக்கு முன் பல நிறைவேற்றப்படாத வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு இருக்கிறது.

இதில் 8 வழிச்சாலை திட்டம் முக்கியமான இடத்தை பெறுகிறது. 277.300 கிலோமிட்டர் வரை சாலை கொண்ட இந்த திட்டம் சென்னை மற்றும் சேலத்தை இணைப்பதாக இருக்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட இடங்கள் வழியாக அமையவிருக்கும் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.9,106 கோடி. இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையாக ரூ.415 கோடி இருக்கலாம்  என்று தோராயமாக கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சி செய்தபோது சேலம் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது மக்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. மேலும் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நிலவியது. அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக 8 வழிச் சாலைக்கு எதிரான நிலைபாட்டில் இருந்தது . மேலும் மக்கள் போராட்டத்தை ஆதரித்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் எவ.வேலு கூறுகையில் “ திமுக அரசு 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்த பிறகு இத்திட்டம் தொடர்ந்து அமலுக்கு வரும்” என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த விளக்கத்தால்  மக்களின் எதிர்ப்பு எதிராக இத்திட்டம் செயல்படுத்தபடுகிறதா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மூத்த திமுக தலைவர் கூறுகையில் ” இதுபோன்ற விமர்சங்களை ஏற்றுகொள்ள முடியாது. ஒரு சாலை அமைக்க மத்திய அரசிடம் இருந்து நிதி வருவதுபோன்ற பல விஷயங்கள் இருக்கிறது. மக்களின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் விட இயலாது. ஆனால் முடிந்தவரை திமுக இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்யும் “என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள அமராவதியில், மக்களே முன்வந்து அவர்களது இடங்களை அரசுக்கு கொடுத்தனர். இதுபோன்று தமிழ்நாட்டிலும் நடைபெற முயற்சிகள் எடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பரந்தூர் விமாநிலையம் அமைப்பதற்கு எதிராக 12 கிராமங்களின் மக்கள் தற்போது போராட்டத்தை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் கைவிடப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம் திட்டத்தை மீண்டும் திமுக அரசு செயல்படுத்த பார்க்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறுகையில் “ திருவாரூருக்கு அருகில் உள்ள பெரியகுடியில் இரண்டு  கிணறுகள் தொண்டும் முயற்சிகள் நடைபெற்றுள்ளது. டெல்டா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பட்ட வேண்டிய இடம் என்று அறிவித்த பிறகு இது நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை மீறி நடந்துகொண்டால் மீண்டும் கடுமையான போராட்டத்தை நடத்துவோம்” என்று கூறியுள்ளார். இந்த மாதத்தின் தொடங்கத்தில் கைவிடப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மீண்டும் வருவாய் துறையினர் கிணறு தோண்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக அரசு முன்பு அதிக சவால்கள் நிறைந்திருக்கிறது. சேலம் 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக்க மாற்றலாமா என்ற ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment