கலவரத்தில் அமைதிக் காத்த மக்களுக்கு நேரில் நன்றி சொன்ன கலெக்டர் ஷில்பா பிரபாகரன்!

கலவரத்தில் ஈடுப்பட்டவர்களின் ஆதரங்களும், சிசிடிவி காட்சிகளும் தன்னிடம் இருப்பதாக கூறி கலெக்டர் ஷில்பா பிரபாகரன்

கலெக்டர் ஷில்பா பிரபாகரன் : நெல்லையில் நேற்று முன்தினம் (13.9.18)  இரவு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடந்த கலவரத்தில்  அமைதி காத்த இஸ்லாமிய மக்களுக்கு அம்மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகரன் நேரில் வந்து நன்றி தெரிவித்தார்.

தமிழக முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமர்சியாக நடைப்பெற்றது. ஆண்டுந்தோறும் விநாயர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏதாவது ஒரு இடத்தில் கலவரம் அல்லது அடில்தடி நடப்பது வழக்கம்.  அந்த வகையில் இம்முறை நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கலவரம் வெடித்தது.

கலெக்டர் ஷில்பா பிரபாகரன் :

நெல்லையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கலவரம் வெடித்தது. இதனால்   செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் நேற்று முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பை மாவட்ட கலெக்டர் ஷில்ப பிரபாகரன் தெரிவித்தார்.

144 தடை உத்தரவு இன்று காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் தாலுகாக்களில் மறுஉத்தரவு வரும்வரை மதுக்கடைகளை மூடவும் உத்தர விடப்பட்டது. அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கலவரத்திற்கு காரணமாக கருதப்படும் இரு தரப்பை சேர்ந்த 15 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கலவரத்திற்கு ஆர் எஸ் எஸ் காரணம் என்று பேச்சும் ஒருபக்க நிலவி வருகிறது.

இதற்கிடையில் நேற்று இரவு செங்கோட்டையில் ஒரு வீட்டின் மீது, பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. இதனை கண்டித்து சாலை மறியல் நடந்தது.  இந்த சம்பவத்தினால் அங்கிருந்த மக்களை பதற்றம் பற்றிக் கொண்டது. இந்நிலையில் செங்கோட்டையில் கலவரம் நடந்த இடத்தை பார்வையிட  கலெக்டர் ஷில்பா பிரபாகரன் நேரில் சென்றிருந்தார்.

அப்போது அங்கிருந்த மக்களிடம் பேசிய அவர்,  கலவரத்தின் போது அமைதிக் காத்த இஸ்லாமிய மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். அவர்களின் கடை மற்றும் வீடுகள் மர்ம நபர்களால் சூறையாடப்பட்ட போது வன்முறையில் இறங்காமல் அமைதிக் காத்த அனைவரும் மிக்க நன்றி என்று கூறினார்.

அதேப் போல் கலவரத்தில் ஈடுப்பட்டவர்களின் ஆதரங்களும், சிசிடிவி காட்சிகளும் தன்னிடம் இருப்பதாக கூறி கலெக்டர் ஷில்பா பிரபாகரன் வரும் திங்கட்கிழமைக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Uncategorized news in Tamil.

×Close
×Close