இவ்ளோ நன்மையா? குக்கர் இல்லாமல் சாதம் இப்படி சமைச்சுப் பாருங்க!

Easy steps to cook rice tamil news: சாதத்தை குழையாமலும், குக்கர் இல்லாமலும் வடிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்

Healthy food tamil news: தொன்மை மிக்க உணவு பட்டியல்களை கொண்டவர்கள் தமிழர்கள் தான் என்றால் மிகையாகாது. நம்முடைய உணவு கலாச்சாரத்தில் உள்ள உணவுகள் விருந்தாகவும் மருந்தாகவும் உள்ளன. அப்படிப்பட்ட உணவுகளை உட்கொண்ட நம்முடைய முன்னோர்கள் உறுதியனர்களாவும், வலிமையானவர்களாவும் இருந்தனர். தற்போது மாறி வரும் உணவு கலாச்சாரங்களால் நாமும் மாடர்ன் உணவுகளுக்கு மாறி வருகிறோம்.

நம்முடைய உணவுகளில் ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் உணவாக சதாம் உள்ளது. முந்தைய இரவில் வடிக்கப்பட்ட சாதத்தை தண்ணீர் ஊற்றி பழைய சாதமாக மாற்றி, மறுநாள் காலையில் சிறிதளவு மோர் அல்லது தண்ணீர் ஊற்றி சாப்பிட்டால், அதற்கு இணை எந்த உணவும் வராது. உணவு கலாச்சாரம் மாறவே அனைவரும் சாதத்தை குக்கரில் வடித்து உண்கிறோம். குக்கரில் வடிப்பதற்கு காரணமாக அனைவரும் கூறுவது ‘வெறும் பாத்திரத்தில் வைத்தால் சாதம் குழைந்து விடுகிறது’ என்கிறார்கள்.

சாதத்தை குழையாமலும், குக்கர் இல்லாமலும் வடிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்

ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானதாக இருக்கும். ஒருவேளை அரிசி நீளமாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் வைக்கலாம். சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த அளவை சரியாக பின்பற்றினால் சாதம் நன்றாக இருக்கும். அடுத்து அடுப்பில் தீ அளவு முக்கியம். கொதி நிலைக்கு வரும் வரை அதிக தீ இருக்கலாம். அதன்பிறகு மிதமான தீ வைக்க வேண்டும். தீ மிக அதிகமாக இருந்தால், சாதம் பக்குவமாக இருக்காது. எனவே அதற்கேற்ப அடுப்பின் தனலை மாற்றிக் கொள்ளவும்.

நாம் சமைக்கும் போது சில நேரங்களில் சாதம் சரியாக வேகாமல் அரைப்பதமாக இருக்கும். அதற்கு காரணம் பாத்திரத்தை முறையாக அடுப்பில் வைக்காமல் இருப்பத்தே ஆகும். எனவே அடுப்பில் பாத்திரத்தை சரியாக உட்கார வைக்க வேண்டும்.

இப்போது சாதம் நன்றாக வெந்த பிறகு அதை வடித்து விடலாம். ஒருவேளை சாதம் குழைந்து விட்டால் கவலை வேண்டாம். சாதத்தை பிடித்து பார்க்கையில் குழைந்தது போல இருந்தால், வடித்த சில நிமிடங்களிலேயே பாத்திரத்தை நிமித்தி விட வேண்டும். பின்னர் ஒரு பெரிய வட்ட வடிவ பாத்திரத்தில் சாதத்தை கொட்டி உலர வைக்க வேண்டும். அந்த சாதத்துடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சதாம் உதிரியாக மாறிவிடும். இனிமேல் சாதம் வடிக்கும் போது குழைந்து விட்டால் கவலைப் படாமல், இது போன்று முயற்சி செய்து பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Uncategorized news here. You can also read all the Uncategorized news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy food tamil news how to make rice without cooker easy steps tamil recipes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com