உண்மை காதலின் வெற்றி: ஹோட்டல் வெயிட்டரை கரம் பிடித்த ராணி எலிசெபத் பேத்தி!

உள்ளூர் ஊடகங்களில் இவர்களது திருமணம் நேரடியாக ஒளிப்பரப்பட்டது.

பல போராட்டங்களுக்கு பிறகு, உண்மை காதலின் வெற்றியாக, ஹோட்டல் வெயிட்டரை கரம் பிடித்தார் ராணி இரண்டாம் எலிசெபத்த்தி பேத்தி. இவரது திருமணம் இங்கிலாந்து அரண்மனையில் நேற்று பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

ராணி எலிசபெத்தின் மூன்றாவது வாரிசான ஆண்ட்ரூவுக்கும், அவரது முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசோனுக்கும் பிறந்த இளைய மகள் யுஜெனீ, அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் வெயிட்டரை காதலிப்பதாக இங்கிலாந்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த காதலுக்கு ராணி தரப்பில் கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. காரணம் அரச குடும்ப வாரிசான யுஜெனீ,முடிசூடும் வரிசையில் 9-வது இடத்தில் உள்ளார் இதனால் இவர் அரசு குடும்பத்தை சார்ந்திடாத நபரை திருமணம் செய்துக் கொள்ளுவது ஏற்புடையதல்ல என்று அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், யுஜெனீ தனது நிலைப்பாட்டை திவீரமாக இருந்தார்.தனது காதல் கணவ்ரை கரம் பிடிப்பதில் தான் மிகவும் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. யுஜெனீ
அமெரிக்க ஓட்டலில் வெயிட்டராக பணியாற்றி வந்த ஜாக் புரூக்ஸ்பேங்க் திருமணம் செய்துக் கொள்ளுவதற்கு ராணி எலிசெபத் பச்சை கொடி காட்டினார்.

இந்நிலையில், அவர்களது திருமணம் பெற்றோர் சமதத்துடன் வின்சர் தேவாலயத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அரச குடும்பத்தினர் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர். இவர்களது திருமணத்தைக் கான தேவாலயத்தின் வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

விண்ட்சர் அரண்மனையில் உள்ள செய்ன்ட் ஜார்ஜ் தேவலாயத்தில் இவர்களது திருமணம் பிரம்மாணடமாகவும், கோலகலமாகவும் நடைப்பெற்றது. உள்ளூர் ஊடகங்களில் இவர்களது திருமணம் நேரடியாக ஒளிப்பரப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Uncategorized News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close