ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வருகிறது தமிழக நடராஜர் சிலை

Tamil Nadu's Nataraja Idol rescued in Australia: தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியாகத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பழங்கால நடராஜர் சிலை மீட்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லிக்கு வர உள்ளது. அதன் பின்னர், அந்த சிலை விரைவில் தமிழகத்திற்கு வரும்.

By: Updated: September 10, 2019, 12:03:31 PM

Tamil Nadu’s Nataraja Idol rescued in Australia: தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியாகத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பழங்கால நடராஜர் சிலை மீட்கப்பட்டு டெல்லிக்கு வர உள்ளது.

தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் பழங்கால சிலைகள் பல காணாமல் போனது. அத்தகைய சிலைகளில் பல கடத்தல் பேர்வழிகளால் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க உயர் நீதிமன்ற உத்தரவு படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.

பொன் மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் ஆஸ்திரேலியாவில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை இருப்பது தெரியவந்தது. தமிழகத்தைச் சேர்ந்த அந்த நடராஜர் சிலை தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் (Art Gallery of South Australia) வைக்கப்பட்டிருந்தது. 75.7 செ.மீ உயரமுள்ள நடராஜர் வெங்கல சிலையை 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓலிவர் போர்ஜ் அண்ட் பெரண்டன் லிங்க் நிறுவனத்திடம் இருந்து தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகம் வாங்கியிருந்தது. இந்த நடராஜர் வெங்கல சிலையை மீட்கும் முயற்சியில் தமிழக காவல்துறை இறங்கியது.

டெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க…

இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கான இந்திய துணை கமிஷனர் கார்த்திகேயன் மூலம் தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில், அந்த நடராஜர் சிலை தமிழகத்தைச் சேர்ந்தது என்பதற்கான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதனால், தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியக நிறுவனம் நடராஜர் சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அந்த நடராஜர் சிலை இன்னும் ஓரிரு நாளில் டெல்லிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், டெல்லியில் இருந்து அந்த சிலை விரைவில் தமிழகத்துக்கு வந்து சேரும். தமிழக காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் நடவடிக்கைகளில் இது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Uncategorized News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadus nataraja idol rescued in australia and coming to india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X