6 இயக்குநர்களின் உருவாக்கத்தில் ‘6 அத்தியாயம்’ படத்தின் டிரெய்லர்

சுரேஷ், சங்கர், அஜயன் பாலா, கேபிள் சங்கர், லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் என 6 இயக்குநர்கள் தனித்தனியாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் இயக்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக 6 இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்கும் படம் ‘6 அத்தியாயம்’. சுரேஷ், சங்கர், அஜயன் பாலா, கேபிள் சங்கர், லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் என 6 இயக்குநர்கள் தனித்தனியாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் இயக்கி, அதை முழுப்படமாகத் தொகுத்துள்ளனர்.

ஹாரர் படமாக உருவாகியுள்ள ‘6 அத்தியாயம்’ படத்திற்கு, ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். டிரெண்ட் மியூஸிக் நிறுவனம் இந்தப் படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது.

×Close
×Close