ரசிகர்களை ரசிக்கும் தலைவனே... ஜுங்கா டிரெய்லர் ரிலீஸ்!!!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜுங்கா’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.  இயக்குநர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது இந்தப் படம். இந்தப் படத்தின் கதாநாயகியாக சயீஷா சைகல் மற்றும் 2வது கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் காமெடியன் யோகிபாபு நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பாரிஸில் வசிக்கும் டானாக நடித்துள்ளார். நடிகை சாயீஷா பாரிஸிலேயே பிறந்து, வளர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். எனவே, படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கேயே எடுக்கப்பட்டுள்ளன.

‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ , ‘காஷ்மோரா’ ஆகியப் படங்களை இயக்கியவர் கோகுல். வெளிநாட்டில் பெரும்பாலான காட்சிகள் அமைந்துள்ள இவரின் இந்த திரைப்படம் தான், விஜய் சேதுபதியின் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம்.

×Close
×Close