விஷ்ணு விஷாலின் "கதாநாயகன்" படத்தில் சர்ப்ரைஸ் தந்த விஜய் சேதுபதி!

'கதாநாயகன்' படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘தப்பு பண்ணாம இருக்குறது தான் தப்பு… தப்பு பண்றது தப்பே இல்ல’

முருகானந்தம் என்பவரது இயக்கத்தில் விஷ்ணு விஷால், கேத்ரீன் தெரசா, சூரி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘கதாநாயகன்’. விஷ்ணு விஷாலின் ‘வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன்’ ஹிட்டனாதில் இருந்து அவரின் கவனம் காமெடி ஸ்க்ரிப்ட் மீதே திரும்பியுள்ளது எனலாம். அதில் தவறு ஒன்றுமில்லை. எப்போதும் மினிமம் கேரண்டி சக்சஸ் தருவது காமெடி ஸ்க்ரிப்ட் தான். 10 மொக்கை காமெடிகள் இருந்தாலும், ஃபரெஷ்ஷாக 4 புது காமெடி சீன்கள் இருந்தால் போதும். அதைவைத்தே, ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துவிடலாம்.

இந்த நிலையில், ‘கதாநாயகன்’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சீன் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதுசரி! மேல உள்ள முதல் வரி எதுக்கு கொடுத்து இருக்கீங்கன்னு தானே கேட்குறீங்க… டிரைலரைப் பாருங்க.

×Close
×Close