இணையத்தை கதற விடும் 'விவேகம்' டீசர்!

ஹீரோயின் பற்றியோ, வில்லன் பற்றியோ... மற்ற கேரக்டர்கள் பற்றியோ டீசரில் எந்த சீனும் இல்லை

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘தல’ அஜித்தின் ‘விவேகம்’ டீஸர் இன்று வெளியானது. இதற்காக நேற்று மாலை முதலே, அஜித் ரசிகர்கள் யூடியூபில் தவமிருக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போடும் வகையில் இருக்கிறதா டீசர்? வாங்க பார்க்கலாம்…

இது ஹாலிவுட் படமா, அல்லது தமிழ் படமா என்று கன்ஃப்யூஸ் ஆகும் அளவிற்கு உள்ளது டீசர். வழக்கமாகவே அஜித் படங்களில் துப்பாக்கி, வெடிகுண்டு, பைக் ரைடிங் அல்லது அதிவேக கார் ரைடிங் போன்றவை இருக்கும். இவையனைத்தும் தவறாமல் இந்த டீசரில் இடம் பிடித்துள்ளது. எனவே, முழுக்க முழுக்க இது ஆக்ஷன் படமாக தான் இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. (ஃபர்ஸ்ட் லுக் வந்தப்பவே அது தெரிஞ்சிடுச்சி..) பட்… இப்போ கன்ஃபார்ம் ஆகியிருக்கு.

மற்றபடி, ஹீரோயின் பற்றியோ, வில்லன் பற்றியோ… மற்ற கேரக்டர்கள் பற்றியோ டீசரில் எந்த சீனும் இல்லை. முழுக்க முழுக்க அஜித்…அஜித்…அஜித் தான்.

யூடியூபில் இதுவரை 1,652,359 வியூஸ்களை பெற்றுள்ளது. அதேபோன்று 1,74,554 லைக்குகளையும், 31,981 டிஸ்லைக்குகளையும் பெற்றுள்ளது.

எது எப்படியோ….ஆக்ஷன் படமாக இருந்தாலும் சரி, காமெடி படமாக இருந்தாலும் லாஜிக் ‘அளவா’க இருக்கணும். இல்லனா ‘அல்வா’ கொடுத்த மாதிரி ஆகிடும். அந்த விஷயத்தில் சிவா மெனக்கட்டிருந்தால், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

அதுசரி….( அனிருத் தான் இப்படத்திற்கு மியூசிக் போட்டு இருக்காரு. அவரைப் பற்றி சொல்லவே இல்ல….) நீங்களே டீசரை பாருங்க.

×Close
×Close