விவேகம் "தலை விடுதலை" சாங்; லிரிக் வீடியோ!

தல அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக இயக்குனர் சிவா கடந்த 6-ஆம் தேதி அறிவித்தார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விவேக் ஓப்ராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 90% வெளிநாடுகளில் தான் நடைபெற்றது.

முன்னதாக, அனிருத் இசையமைத்த இப்படத்தின் ‘சர்வைவா’ எனும் பாடல் வெளியாகி செம ஹிட்டானது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் ‘தலை விடுதலை’ பாடல் வெளியாகி ராக் ஹிட் அடித்து வருகிறது. அஜித் ரசிகர்கள் பலரின் ரிங் டோன், இப்போது இந்த பாடலாக தான் இருக்கும் என அடித்துக் கூறலாம்.

இதைத் தொடர்ந்து, ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில் தலை விடுதலை பாடலில் லிரிக் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது படக் குழு. அப்படியெனில், இனி பைக், ஆட்டோக்களில் இந்த பாடலின் தெறி வரிகளைக் காணலாம். நெவர்… எவர்… கிவ் அப்…!

×Close
×Close