மகளின் பள்ளியில் டயர் ஓட்டிய அஜித் : வைரலாகும் வீடியோ

தன்னுடைய மகள் அனோஷ்காவின் பள்ளியில் அஜித் டயர் ஓட்டி விளையாண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய மகள் அனோஷ்காவின் பள்ளியில் அஜித் டயர் ஓட்டி விளையாண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்ட அஜித்துக்கு, அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். 2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்த அனோஷ்காவுக்கு, தற்போது 10 வயது ஆகிறது.

என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும், கணவன் மற்றும் தந்தைக்குரிய விஷயங்களை அஜித் செய்யத் தவறுவதே இல்லை. தன்னுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது போன்றவற்றை அஜித்தே பெரும்பாலும் செய்கிறார்.

மேலும், பேரண்ட்ஸ் மீட்டிங்கிலும் தவறாமல் கலந்து கொள்வார். அப்படித்தான் அனோஷ்கா பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார் அஜித். குழந்தைகளும், அவர்களுடைய பெற்றோர்களும் கலந்துகொண்ட டயர் ஓட்டும் போட்டியில் அனோஷ்காவோடு கலந்து கொண்டுள்ளார் அஜித். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close