அனிருத் குறிப்பிட்டுள்ள 'அந்த' கன்னட நண்பர் யார்?

அனிருத் வெளியிட்ட கன்னட பட டீசர்... ஏன்?

கன்னடர்களுக்கு எதிராக பேசிய சத்யராஜ் நடித்துள்ள ‘பாகுபலி 2’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தலைமையில், கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் நடத்தினர். இதற்கு முன்னர் கர்நாடகத்தில் வெளியான பாகுபலி முதல் பாகமும் சரி, மற்ற சத்யராஜ் நடித்த படங்கள் வெளியான போதும், எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தாத கன்னட அமைப்பினர், பாகுபலி-2 கன்னட வெளியீட்டில் மட்டும் பிரச்சனைக் கிளப்பினார். ஏனெனில், இப்படத்திற்கு தான் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

பின் சத்யராஜ் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்ட பின்னரே, அப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதித்தனர். கமல்ஹாசன் கூட சத்யராஜின் மன்னிப்பிற்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், நேற்று மே 1 தினத்தில் தனது ட்விட்டரில், ‘என் உயிர் நண்பன் டேனீஷ் சைட்ஸ்ஸின் முதல் பட டீசர்’ என்று ஒரு கன்னட படத்தின் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த படத்தின் பெயர் ‘ஹம்பில் பொலிடீஷியன் நோகராஜ்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

×Close
×Close