தெலுங்கில் அனிருத்தின் முதல் படம்: மாஸ் காட்டும் பவன்கல்யாண்! 'அக்னதாவாசி' டீசர்!

மாஸ் + கிளாஸ் + காமெடி டைரக்டரான த்ரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது....

நம்ம ஊரு ‘ராக்ஸ்டார்’ அனிருத், தெலுங்கு திரை உலகில் இசையமைத்திருக்கும் முதல் படம் ‘அக்னதாவாசி’.

தெலுங்கு ‘தல’ என நம்மூர்காரர்களாலும், ‘பவர் ஸ்டார்’ என்று ஆந்திர வாலாக்களாலும் அன்போடு அழைக்கப்படும் பவன் கல்யாண் இப்படத்தின் ஹீரோ. கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் என இரு ஹீரோயின்கள். மிக முக்கியமான விஷயம், இப்படத்தை இயக்கியிருப்பது த்ரி விக்ரம். மாஸ் + கிளாஸ் + காமெடி டைரக்டரான த்ரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அனிருத் இசையில் வெளியாகியிருந்த இப்படத்தின் ‘பைட்டிகொச்சே சூஸ்தே’ பாடலும், ‘காலி வாலுகா’ பாடலும் ஹிட் அடித்துள்ளது. அதிலும், பைட்டிகொச்சே சாங் செம ஹிட்.

இந்த நிலையில், டீசர் இன்று வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close