ஏ.ஆர்.முருகதாஸின் "ஸ்பைடர்": முதல் பாடல் "பூம் பூம்" எப்படி இருக்கு?

தெலுகு ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் “ஸ்பைடர்”. தமிழ், தெலுகு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரகுல் பரீத் சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மகேஷ் பாபுவுடன் கூடவே வரும் ஒரு முக்கியமான ரோலில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். ஏற்கனவே, வெளியான இப்படத்தின் டீசர் செம ஹிட்.

இந்நிலையில், ‘பூம் பூம்’ எனும் முதல் பாடலை ஸ்பைடர் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுகு என இரு மொழிகளிலும் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

×Close
×Close