அதர்வா பெரிதும் நம்பியிருக்கும் 'செம போத ஆகாதே' 2வது டிரைலர்!

'செம போத ஆகாதே' 2வது டிரைலர்

தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கையாக இருப்பவர்களில் அதர்வாவுக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கிறது. இயக்குனர் பாலாவால் பட்டை தீட்டப்பட்டுள்ள அதர்வா, தமிழ் ஹீரோவுக்கான முகம், உடல், உடல்மொழி என அனைத்திலும் பாஸ் செய்கிறார். ஆனால், கதைத் தேர்வில் தான் கோட்டை விடுகிறார். சினிமாவில் நானும் இருக்கிறேன் என்பது போல் படம் பண்ணாமல், கொஞ்சம் காத்திருந்தாலும் தனக்கேற்ற கதையில் கொஞ்சம் வெயிட்டான பாத்திரம் ஏற்று நடித்தால், நிச்சயம் மக்கள் மனதில் இன்னும் இடம் பிடிக்கலாம். அந்த தகுதி அவருக்கு உள்ளது.

இந்நிலையில், அதர்வா தானே தயாரித்து நடித்திருக்கும் படம், ‘செம போத ஆகாதே’. அதர்வாவை வைத்து முதல் படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் தான் இப்படத்திற்கும் இயக்குனர். அதர்வா இந்தப் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் தனது மார்க்கெட்டை உயர்த்தும் என்று கருதுகிறார்.

மிஷ்தி சக்ரவர்த்தி, அனைகா சோதி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ‘பிஜிஎம் கிங்’ யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

×Close
×Close