பட்டைய கிளப்பும் பாகுபலி-2 பாடல் டீசர்... "பலே பலே பாகுபலி"

சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி-2 இன்னும் சில நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. அப்படத்தின் பாடல் டீசல் வெளியிடப்பட்டுள்ளதால், பாகுபலி-2 மீதான ஆவல்...

சென்னை: இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பாகுபலி-2 திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், ரசிகர்கள் மத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அப்படத்தின் பாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பாகுபலி-2 பாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் எக்கச்செக்க குஷியில் உள்ளனர். படம் வெளிவர இன்னும் சில நாட்களே பாக்கி உள்ளதால். ரசிகர்கள் சொல்வது “வி ஆர் வெய்டிங்”

பாகுபலியின் முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகம் என இரண்டு பாகங்களையும் சேர்ந்து சுமார் ரூ.400 கோடியில் இருந்து ரூ.450 வரை செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலியின் முதல் பாகம் மட்டும் ரூ.600 கோடிக்கும் மேல் உலகளவில் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் என பல்வேறு மொழியில் வெளியாகும் பாகுபலி-2 இந்தியாவில் மட்டும் சுமார் 6,500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் அதிகபட்சமாக பாலிவுட்டில் 4,500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. குறிப்பிடும்டியாக தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் உள்ள 95% திரையரங்குகளை ஆக்கிரமிக்க காத்திருக்கிறது பாகுபலி-2. மேலும் அந்த மாநில அரசுகள் ஒரு நாளைக்கு 5 முதல் 6 காட்சிகளை திரையிடவும் அனுமதி வழங்கியுள்ளதாம்.

இணையத்தில் கலக்கி வரும் பாகுபலியின்-2 டிரெய்லர் இதுவரை 7.7 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளதாம். இதுதான் இந்தியாவில் வெளியான படங்களின் டிரெய்லர் ஒன்று அதிகமுறை பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close