திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் டீசர்!

டீசரின் முதல் வசனமே 'அண்ணே! இங்க பக்கத்துல எங்கயாவது நல்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்குமா?" என்பதுதான்

‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ் ஆகியோர் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. நித்திலன் சுவாமிநாதன் எனும் புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

டீசரின் முதல் வசனமே ‘அண்ணே! இங்க பக்கத்துல எங்கயாவது நல்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்குமா?” என்பதுதான். இடையே ‘இது நாய்ப்படம்’ என்றெல்லாம் வசனங்கள் வருகிறது. தைரியம் தான் போங்க. 1 நிமிடம் 9 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில் படக்குழுவின் உழைப்பு நன்றாக தெரிகிறது. சில புதுமுகங்களை இப்படத்தில் நடித்துள்ளனர்.

இசை – அஜனீஷ் லோக்நாத்ம், ஒளிப்பதிவு – என்.எஸ்.உதயகுமார், படத்தொகுப்பு – அபினவ் சுந்தர் நாயக்.

×Close
×Close