ஜேப்பியார் கல்லூரியில் "பிக்பாஸ்" ஜூலி போட்ட குத்தாட்டம்! ஓவியா ஆர்மி செய்த ஆர்ப்பாட்டம்!

ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் பிக்பாஸ் புகழ் ஜூலி நடனம் ஆடியிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அடைந்த பிரபலத்தை விட, அதிக பிரபலம் ஆனார் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர், போட்டியாளர்கள் மீடியாவுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதன்படி, சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஜூலி, “விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்காக போராட மிகவும் ஆசையாக இருக்கிறது. அதுபோல், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் மீண்டும் கலந்து கொள்ளவும் எனக்கு விருப்பம் உள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி விழாவில் கலந்து கொண்டு, குத்து பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் ஜூலியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

டான்ஸ் ஆடி முடித்தவுடன், மைக் பிடித்து ஜூலி பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில், அமர்ந்திருந்த மாணவர்கள்…. அதாங்க ஓவியா ஆர்மி, ஓவியா… ஓவியா… என அரங்கம் அதிர கூச்சலிட்டனர். இதனால், பேச முடியாமல் ஜூலி தவித்த போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேறொரு கேள்வி கேட்டு நிலைமையை சரி செய்ய முயன்றனர். அந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போதே, ஓவியா ஆர்மி இன்னும் பயங்கரமாக கூச்சலிட, சில நொடிகள் மட்டும் பேசிவிட்டு மேடையில் இருந்து வெளியேறினார் ஜூலி. அந்த வீடியோ இதோ,

×Close
×Close