இன்று முதல் மீண்டும் பொங்கல் பரிசு... நாளையும் ரேசன்கடைகள் இயங்கும்!

இதற்காக ரூ. 2363 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

Tamil Nadu government pongal 2020 gift hampers : ஒவ்வொரு ஆண்டின் பொங்கல் பண்டிகையின் போதும் தமிழக அரசு பொங்கல் பரிசினை ரேசன் கடைகள் வாயிலாக மக்களுக்கு அளிக்கும். அரிசி ரேசன் கார்ட் வைத்திருக்கும் குடும்பத்தினர் இந்த பொங்கல் பரிசு திட்டத்தின் கீழ் ஆதாயம் அடைவார்கள்.

இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை வழங்கப்படும். இதற்காக ரூ. 2363 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலின் காரணமாக பொங்கல் பரிசு தருவது பல மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்காக கைவிடப்பட்டது.

தேர்தல் முடிந்து, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இன்று முதல் மீண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் 13ம் தேதி வரை காலை 9 முதல் மாலை 6 மணி வரையில் இந்த தொகுப்பினை ரேசன்கடைகளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வார விடுமுறை இந்த வாரத்தில் கிடையாது. எனவே நாளையும் பொதுமக்கள் தங்களின் பொங்கல் பரிசுகளை ரேசன் கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : பொங்கல் விடுமுறை: சிறப்பு ரயில்களை அறிவித்த தென்னக ரயில்வே

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

Web Title:

Tamil nadu government pongal 2020 gift hampers will be distributed till january

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close