ஆர்.கே.நகரில் சந்தி சிரிக்கிறதா ஜனநாயகம்?

ஆர்.கே.நகரில் சந்தி சிரிக்கிறதா ஜனநாயம்? என்று ஐஇதமிழ் ஆசிரியர் ச.கோசல்ராம், காப்பி எடிட்டர் எஸ்.செல்வராஜ் இருவரும் விவாதிக்கிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனுத்தாக்கல் செய்த நேரத்தில் இருந்தே பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றது. யாரும் எதிர்பாராத நேரத்தில் விஷால் மனுதாக்கல் செய்வார் என்று முதன் முதலில் www.ietamil.com தான் சொன்னது. நாம் சொன்னபடியே டிசம்பர் 4ம் தேதி அவர் மனுத்தாக்கல் செய்தார்.

அவர் கமல் ஹாசன் சொல்லித்தான் தேர்தலில் போட்டியிடுவதாக சொல்லப்பட்டது. பின்னர், தெலுங்கு பேசும் மக்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமான அளவில் உள்ளனர். அதிமுக வேட்பாளர் இ.மதுசூதணன் தெலுங்கு பேசுபவர். தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுக்களை பிரிப்பதற்காகவே விஷாலை போட்டியிட வைத்தார், டிடிவி.தினகரன் என்றும் சொல்லப்பட்டது.

அதனை டிடிவி.தினகரன் இல்லை என்று மறுத்தார். இதை ஆளும் அதிமுக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதை வேட்புமனுவை நிராகரிக்க வைத்ததிலேயே வெளிப்படையாக தெரியவந்தது. விஷாலுக்கு இழைக்கப்பட்டது அநீதியா? அல்லது ஆர்.கே.நகரில் சந்தி சிரிக்கிறதா ஜனநாயம்? என்று ஐஇதமிழ் ஆசிரியர் ச.கோசல்ராம், காப்பி எடிட்டர் எஸ்.செல்வராஜ் இருவரும் விவாதிக்கிறார்கள்.

×Close
×Close