குடியால் வந்த வினை: 2000 அடி பள்ளத்தாக்கில் குதித்து இரண்டு பேர் பலியான சோகம்! வீடியோ

கைகளில் பாட்டில் ஏந்திக்கொண்டு, தடுமாறிக் கொண்டே இருக்கும் அவர்கள் பின்னர் பள்ளத்தாக்கில் விழுந்துவிடுகின்றனர்.

2000 அடி பள்ளத்தாக்கில் குதித்து இரண்டு பேர் பலியான அதிர்ச்சியளிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துடர்க் பகுதியில் உள்ள அம்போலி கோட் பள்ளத்தாக்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபலமான சுற்றுலா தனமாக விளங்கும் அங்பகுதியில் இச்சம்பவம் நிகந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது: கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி, இம்ரான் காராடி(26) மற்றும் பிரதாப் ரத்தோடு(21) ஆகியோர் தங்களது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, இம்ரான் காராடி(26) மற்றும் பிரதாப் ரத்தோடு(21) ஆகியோர் 2000 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் மகாராஷ்டிராவில் உள்ள கோல்ஹாபூர் பகுதியில் உள்ள கோழிப்பணைணையில் வேலை செய்து வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா சென்ற போது இம்ரான் காராடி மற்றும் பிரதாப் ஆகியோர் நண்பர் குழுவில் இருந்து பிரிந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களை காணவில்லை என உடன்வந்தவர்கள் காவல் நிலையத்தை நாடியுள்ளனர். இதனையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகிவருகிறது. கைகளில் பாட்டில் ஏந்திக்கொண்டு, தடுமாறிக் கொண்டே இருக்கும் அவர்கள் பின்னர் பள்ளத்தாக்கில் விழுந்துவிடுகின்றனர். அந்த பள்ளத்தாக்கு சுமார் 2000 அடி என்பது குறிப்பிடத்தக்கது. மழை மற்றும் பனி காரணமாக உயிரிழந்தவர்களின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close