கண்ணாடி கதவை முட்டியே உடைத்துத் தள்ளிய ஆக்ரோஷமான ஆடு! வீடியோ

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், நடந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு விசாரணையை தொடங்க திட்டமிட்டனர்.

வித்தியாசமான சம்பவங்கள் தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் நம் கண்ணில் சிக்குவது சிலவை தான். அப்படித் தான், இந்த வீடியோவும். ஆள் இல்லாத ஆஃபிசில் உள்ள சிசிடிவி சிக்கியுள்ளது இந்த வீடியோ.

அமெரிக்க நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது தனியாக வரும் ஆடு ஒன்று, கண்ணாடி கதவை தனது கொம்புகளால் ஆக்ரோஷமான முறையில் முட்டித் தள்ளுகிறது. இறுதியில் அந்த கண்ணாடி கதவு உடைந்து கீழே விழுகிறது. இதனால் பதற்றத்தில் பின்வாங்கிச் செல்லும் ஆடு, பின்னர் கண்ணாடி கதவின் அடுத்த பகுதியை மீண்டும் வந்து முட்டுகிறது. இறுதியில், அந்த கண்ணாடி கதவை சுக்குநூறாக உடைத்துவிட்டு அங்கிருந்து செல்கிறது.

இதன்பின்னர் அங்கு வந்த கம்பெனியின் மேனேஐர், கம்பெனியில் கொள்ளை தான் நடந்திருப்பதாக நினைத்து அதிர்சியடைந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், நடந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு விசாரணையை தொடங்க திட்டமிட்டனர். அதன்பின்னர், அங்கிருந்த சிசிடிவி காட்சியை பார்த்தபின்பு தான், அங்கு என்ன நடந்தது என்பது தெரியவந்தது. அங்கு கூட்டமாக ஆடுகள் பல சென்றுள்ளன. அதில் திடீரென ஒரு ஆடு மட்டும் கதவை உடைத்துத் தள்ளியது பின்னர் தான் தெரியவந்தது.

×Close
×Close