'கோலி சோடா 2' படத்தின் டிரைலர்!

விஜய் மில்டன் இயக்கியுள்ள 'கோலி சோடா' இரண்டாம் பாகத்தின் டிரைலரை விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்

விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கோலி சோடா’ இரண்டாம் பாகத்தின் டிரைலரை விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.

சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் ‘கோலி சோடா 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை விஜய் மில்டனின் ரஃப் நோட் தயாரித்துள்ளது.

ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்தவர்களைப் பயன்படுத்தாமல், புதுமுகங்களை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் விஜய் மில்டன்.

×Close
×Close