ஒரு மணி நேரத்தில் என்ன நடக்கும்? 'கிரகணம்' ட்ரெய்லர் வெளியீடு!

சந்திரகிரகணத்திற்கும், கதாப்பாத்திரங்களுக்கும் இடையேயான ட்விஸ்ட்.

பல்வேறு குறும்படங்களை இயங்கியுள்ள இளன் ‘கிரகணம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஹீரோவாக கிருஷ்ணா, கயல் சந்திரன் நடித்திருக்கின்றர். புதுமுகமான நந்தினி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஜெயபிரகாஷ், கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையிலும், சரவணன் ஒளிப்பதிவும் செய்துள்ளனர்.

ஒருநாளில் நடக்கும் கதை, ஓரிரவில் நடக்கும் கதைகள் வந்துவிட்ட நிலையில், ஒரே ஒரு மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த படம் தான் இந்த கிரகணம். சுமார் இரண்டேகால் மணி நேரத்தில் வரவுள்ள இந்த திரைப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு, பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுமாம். அந்த பிரச்சனைகள் எல்லாம் சந்திர கிரகணம் நிகழும் அந்த நேரத்தில் சட்டென காணாமல் போய்விடுவது தான் கதை. கதாப்பாத்திரங்களுக்கும், சந்திர கிரணகத்திற்கும் இடையே என்ன தொடர்பு என்பது  திரைப்படத்தின் ட்விஸ்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close