ஆடிக் கொண்டிருந்த போதே உயிரைவிட்ட புது மாப்பிள்ளை!

இதனால், திருமண வைபவம் நடக்க வேண்டிய இடம், சோகமயமாக காட்சியளித்தது...

By: May 13, 2017, 1:08:20 PM

குஜராத்தின் வதோதரா அருகே, போர்சாட் எனும் பகுதியில், 25 வயதான சாகர் சோலங்கி என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளை சாகரை, அவரது குடும்ப நண்பர்கள் தோளில் வைத்து ஆடிக் கொண்டிருந்தனர்.

மாப்பிள்ளையும், தனக்கு நடக்கப் போகும் திருமணத்தை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென, தோளில் உட்கார்ந்திருந்த படியே சரிந்து விழுந்தார்.

பதறியடித்த உறவினர்கள், மாப்பிள்ளை சாகரை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் மாரடைப்பின் காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால், திருமண வைபவம் நடக்க வேண்டிய இடம், சோகமயமாக காட்சியளித்தது. உடனடியாக, திருமண சடங்குகள் நிறுத்தப்பட்டன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Groom died while dancing in his wedding ceremony

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X