கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது?
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ, குளிக்க வைக்கவோ, முத்தவிடவோ கூடாது. மருத்துவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் இருப்பதால், அவசர காரணங்கள் இன்றி பிரேத பரிசோதனை செய்யக்…
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ, குளிக்க வைக்கவோ, முத்தவிடவோ கூடாது. மருத்துவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் இருப்பதால், அவசர காரணங்கள் இன்றி பிரேத பரிசோதனை செய்யக் கூடாது. ஒரு வேளை செய்யும் நிலை உருவாகும் பட்சத்தில் மருத்துவர்கள் அந்த அறை முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இறந்தவர்களின் உடலை உடனே அப்புறப்படுத்த இயலவில்லை என்றால் நான்கு முதல் ஆறு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அவ்வுடல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.