முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வீட்டில் பற்றிய தீ! வீடியோ

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகிலேயே அதிக விலைமதிப்பில் கட்டப்பட்ட வீடுகளில் இதற்குத் தான் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் பிரம்மாண்டமான வீட்டில் நேற்றிரவு தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபரான முகேஷ் அம்பானியின் பிரம்மாண்டமான வீடு மும்பையில் உள்ளது. உலகிலேயே அதிக பொருட் செலவில் கட்டப்பட்டது இந்த வீடு என்பது குறிப்பிடத்தக்கது. திங்கள் கிழமை இரவு 9:15 மணியளவில், அந்த வீட்டின் 6-வது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து தீயை அணைத்தனர்.

முகேஷ் அம்பானியின் இந்த வீடானது 27 தளங்களோடு, 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகிலேயே அதிக விலைமதிப்பில் கட்டப்பட்ட வீடுகளில் இதற்குத் தான் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டடத்தை கட்டுவதற்கு கிட்டத்தட்ட ஒன்று முதல் இரண்டு பில்லின் டாலர் வரை செலவு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த குடியிருப்பில் முன்று ஹெலிபேட் இருப்பது கவனிக்கத்தக்கது. அதோடு 600 பணியாட்கள் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

×Close
×Close