சிஎஸ்கே வெற்றி பெற வேண்டுமென ராப் பாடல் வெளியிட்ட 'டிஞ்ஜக் பூஜா'!

உங்களால் முடிந்தால், உங்களுக்கு ஆற்றல் இருந்தால் அந்தப் பாடலை கேட்டு ரசியுங்கள்

‘டிஞ்ஜக் பூஜா’ எனும் இந்த பெயரை சொன்னால், வடக்கில் அனைவருக்கும் நன்கு தெரியும். யூடியூபில், தானே ராப் பாடல்களை பாடி வெளியிடுவது இவரது வழக்கம். அப்படி வெளியிட்டே, இவர் பாப்புலர் ஆனவர். ஆனால், இவரது பாடல்களை கேட்க தான் வலிமை மிக்க துணிச்சல் வேண்டும்.

இவர் தோனியின் தீவிர ரசிகையாம். இதனாலேயே, சென்னை சூப்பர் கிங்ஸ் இவரது பேவரைட் ஐபிஎல் டீம் என்று கூறுகிறார். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற வேண்டும் என்று, ஒரு ராப் பாடல் ஒன்றை பாடி வெளியிட்டு இருக்கிறார்.

உங்களால் முடிந்தால், உங்களுக்கு ஆற்றல் இருந்தால் அந்தப் பாடலை கேட்டு ரசியுங்கள். ஆனால், இவரது கவர்ச்சிக்கு என்றே ஏகப்பட்ட பேன்ஸ் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்!.

×Close
×Close