அனிருத் பாடிய ‘இறைவா’ பாடலின் லிரிக் வீடியோ

வாழ்க்கை மற்றும் காதலைப் பற்றி டிஸ்கஸ் செய்வது போல இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

By: Updated: November 10, 2017, 12:47:30 PM

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சினேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கருத்தவன்லாம் கலீஜா’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்தப் பாடலை ஏகப்பட்ட பேர் கவர் சாங்காக பாடியும், நடனம் ஆடியும் வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘இறைவா’ பாடலின், லிரிக் வீடியோ நேற்று வெளியானது.

‘இறைவா’ + ‘உயிரே’ என ஒரே பாடலில் இரண்டு எமோஷன்களையும் மிக்ஸ் செய்து இசையமைத்திருப்பதாக அனிருத் தெரிவித்துள்ளார். வாழ்க்கை மற்றும் காதலைப் பற்றி டிஸ்கஸ் செய்வது போல இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Iraiva lyric video from velaikkaran movie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X