தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து 'Sneak Peak'

சந்தோஷ் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’. இப்படத்தின் ‘Sneak Peak’ நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 1 நிமிடம் 33 நொடிகள் ஓடும் இந்த வீடியோ, இன்றும் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

காமத்தை விரும்பும் பேய் எனும் கதைக்களத்தில் காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ். முன்பெல்லாம், ‘டபுள் மீனிங்’ என்று தான் காம நெடி கொண்ட வசனங்களை சொல்வார்கள். ஆனால், இப்படத்தில் எல்லாமே, மிக நேராகவே சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு சாம்பிள் இந்த வீடியோ.

‘ஒரு மாசமா போடலையாம்.. அதனால் ஓட்டை மூடிடுச்சாம்.!!’

×Close
×Close