“இது வேதாளம் சொல்லும் கதை” டீசர்! அடல்ட் சீன்ஸ் இல்லாமல் படம் எடுக்க முடியாதா?

ரதிந்த்ரன் ஆர்.பிரசாத் என்பவரது இயக்கத்தில் அஷ்வின், அபய் தியோல், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், டேரன் புர்ரிட்ஜ் ஆகியோர் நடித்து வரும் படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’. ஃபேண்டசி வகைப் படமாக இது உருவாகி வருகிறது. ‘இல்லுமினாட்டி’கள் பற்றியும் இதில் பேசப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டிஷ் சண்டை பயிற்சியாளர்…

By: September 23, 2017, 1:35:32 PM

ரதிந்த்ரன் ஆர்.பிரசாத் என்பவரது இயக்கத்தில் அஷ்வின், அபய் தியோல், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், டேரன் புர்ரிட்ஜ் ஆகியோர் நடித்து வரும் படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’. ஃபேண்டசி வகைப் படமாக இது உருவாகி வருகிறது. ‘இல்லுமினாட்டி’கள் பற்றியும் இதில் பேசப்பட்டுள்ளது.

இதற்காக பிரிட்டிஷ் சண்டை பயிற்சியாளர் டேரன் புர்ரிட்ஜ்-ஐ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான காட்சி அமைப்புகளுடனும், வசனங்களுடனும் இந்த டீசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு அடல்ட் காட்சியும் டீசரில் இடம்பெற்றுள்ளது. பார்ப்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் வகையில் அக்காட்சி இருந்தாலும், கதைக்கு தேவையானதாக இருப்பின் ஓகே தான்.

இருப்பினும், என்னதான் வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும், நம் கலாச்சாரத்திற்கு எதிரான ‘இதுபோன்ற’ காட்சி அமைப்புகளை தவிர்ப்பதை இயக்குனர்கள் முயன்றால் நல்லது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Ithu vedhalam kathai sollum movie teaser released today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X