'வனமகன்' டிரைலர்!

டிரைலரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை நமக்கு கூட்டிவிடுகிறது.

எப்படியாவது மீண்டுமொரு வெற்றியைக் கொடுத்துவிட வேண்டுமென்று இயக்குனர் விஜய் மிக சிரத்தை எடுத்து உருவாக்கியிருக்கும் படம் வனமகன். காட்டிலேயே பிறந்து காட்டிலேயே வளர்ந்த ஒருவன், இன்றைய நவநாகரீக உலகிற்குள் வந்தால் என்ன ஆகும்? என்பதே இப்படத்தின் ஒன்லைன்.

இதில் வனமகனாக ஜெயம்ரவியும், அவரைக் காதலிப்பவராக புதுமுகம் சாயீஷா சைகலும் நடித்துள்ளனர். ஹரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அந்த டிரைலரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை நமக்கு கூட்டிவிடுகிறது. நீங்களும் கண்டு ரசியுங்கள். இப்படம் மே-19 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close