ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படத்தின் டீஸர்

பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

By: November 15, 2017, 6:01:32 PM

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரஜினியின் ‘லிங்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பொதுவாக, ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்வார் பாலா. ஆனால், இந்தப் படத்தைத் தொடங்கிய சில மாதங்களிலேயே முடித்துவிட்டார் என்பது ஆச்சரியம்.

இந்தப் படத்தின் டீஸரை, நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Jyothikas naachiyaar official teaser

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X