சுந்தர்.சி.யின் 'கலகலப்பு 2' டிரைலர்!

கலகலப்பு 2 படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது

சுந்தர்.சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தற்போது தயாராகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜீவா, ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கேத்ரின் தெரேசா, சதீஷ், வையாபுரி, மனோபாலா, விடிவி கணேஷ், சந்தான பாரதி, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்க, சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த டிசம்பர் 25ம் தேதி வெளியாகியிருந்த நிலையில், இன்று டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கம் போல், சுந்தர்.சி.யின் அக்மார்க் காமெடி தூவல்களை டிரைலரில் பார்க்க முடிகிறது.

×Close
×Close