கிருஷ்ணாவின் தங்கைக்கு ஃபேஸ்புக் நண்பரால் வந்த பிரச்சனை!

இந்தக் கால தலைமுறையினர் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை

நடிகர் கிருஷ்ணா நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படமான களரி படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

களரி ட்ரெய்லர்:

வீரா’ படத்திற்கு பிறகு நடிகர் கிருஷ்ணாவின் ‘களரி’, தனுஷின் ‘மாரி 2’, சத்யசிவாவின் ‘கழுகு 2’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘களரி’ படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் டூயட் பாடி ஆடியுள்ளார்.

வி.வி.பிரசன்னா இசையமைத்துள்ள இதற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபாகர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘நக்ஷத்ரா மூவி மேஜிக்’ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் 2 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

கேரளாவில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், எதற்கெடுத்தாலும் பயப்படும் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார். ந்த நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அண்ணன் தங்கை பாசம், காதல், காமெடி, குடும்பம் எனக் கலந்து டிரெய்லர் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், படம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 24) வெளியாகும் என டிரெய்லரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்திப் பற்றி பேசிய இயக்குனர் கிரண் சந்த், ”கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞராக நடித்திருக்கிறார். இந்தக் கால தலைமுறையினர் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை குறித்து படத்தில் பேசப்பட்டுள்ளது “ என்று கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close