கமல் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் செய்தி: 'வெற்றி விழா' டிஜிட்டல் டிரைலர்!

இப்படம், 175 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பு நடிப்பில் கடந்த 1989-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வெற்றிவிழா’. பிரதாப் போத்தன் இப்படத்தை இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்த இப்படம், 175 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வெற்றிவிழா படத்தின் டிஜிட்டல் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படம் டிஜிட்டல் வடிவில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close