சிவகார்த்திகேயனின் முதல் படைப்பு 'கனா' டிரெய்லர்

சிவகார்த்திகேயனின் 'கனா' டிரெய்லர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள படம் ‘கனா’. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ‘கனா’ டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். படத்தில் வரும் ‘வாயாடி பெத்த புள்ள..’ என்ற பாடலை சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடியுள்ளார்.

கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு, மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தை என்று சிறப்பான படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close