இது 'சிம்ரன்' டீசர்.... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல......

அதுக்கும் மேல....

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நாயகி என்றால் அது கங்கனா ரனாவத் தான். இவரது நடிப்பிற்காகவே, இவரது படங்களை காண ரசிகர்கள் ஏங்குவார்கள். ஒவ்வொரு படத்திலும், நடிப்பில் இவர் காட்டும் வித்தியாசம் நம்மை ஆச்சரியப்படுத்தும். அதனால் தான் இவரை ‘பாலிவுட் குயின்’ என்றே அழைக்கிறார்கள்.

தற்போது இவர் நடித்துள்ள ‘சிம்ரன்’ எனும் பாலிவுட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதிலும், இவர் சேட்டைகளை பார்த்தால், படத்தில் தாறுமாறு பண்ணியிருப்பார் என்றே தோன்றுகிறது. ஹன்சல் மேத்தா இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close