‘இண்டலிஜன்ஸ்’ அதிகாரியாக கலக்கும் மகேஷ் பாபு: ரசிகர்களை கவர்ந்த ‘ஸ்பைடர்’ ட்ரெய்லர்

‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், சிறிது நேரத்திலேயே அதனை யுடியூபில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

By: Updated: September 15, 2017, 01:48:20 PM

நடிகர் மகேஷ் பாபு நடித்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் திரைக்கு வரவிருக்கும் ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், சிறிது நேரத்திலேயே அதனை யுடியூபில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் ‘ஸ்பைடர்’ திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்திற்காக நடிகர் மகேஷ் பாபு தன் சொந்தக் குரலில் தமிழில் முதன்முதலாக டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

வில்லன் கதாபாத்திரங்களாக இருக்கட்டும், கதாநாயகனாக இருக்கட்டும் தன்னுடைய வித்தியாசமான, மக்களை குழப்பினாலும் அவர்களையே ரசிக்க வைக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இத்திரைப்படத்தின் வில்லன். ரொம்ப நாட்களாகவே திரையில் தலையைக் காட்டாமல் இருக்கும் நடிகர் பரத், அவர் மட்டுமல்லாமல் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

ஒரு நிமிடம் 52 நொடிகள் ஓடும் டிரெய்லரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். இக்கட்டுரை பதிவிடும் வரை, ஸ்பைடர் தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை 7,25,352 பேரும், தெலுங்கு ‘ஸ்பைடர்’ திரைப்படத்தை 20,34,687 பேரும் பார்த்தனர்.

இத்திரைப்படத்தில், மகேஷ் பாபு இண்டலிஜன்ஸ் பீரோ அதிகாரியாக நடிக்கிறார். தான் கண்டுபிடித்திருக்கும் பென்பொருள் மூலம், உதவி தேவைப்படுபவர்களுக்கு அவர் உதவுவார் என தெரிகிறது.

முதன்முதலாக தமிழில் மகேஷ் பாபு டப்பிங் பேசியிருப்பதால், அவருடைய முதல் நேரடி தமிழ் திரைப்படம் ஸ்பைடர். இத்திரைப்படத்துக்கு பின், இவருக்கு தமிழ் ரசிகர்கள் நிச்சயம் அதிகமாவார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Mahesh babus spyder trailer impresses makers forced to unveil it before schedule

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X