மக்கள் நீதி மய்யத்தின் பாடல்கள் வெளியீடு! தொண்டர்கள் உற்சாகம்!
மக்கள் நீதி மய்யத்தின் பாடல்கள் இன்று வெளியீடு
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறு பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி மதுரையில் தொடங்கினார் கமல்ஹாசன். அன்றைய தினமே உயர்நிலைக்குழு உறுப்பினர்களையும் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாவட்டம்தோறும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ரசிகர்கள் சந்திப்பு என உச்சக்கட்ட பிஸியில் இருக்கும் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கி, அதையும் தன்னுடைய அரசியல் மேடையாக பயன்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த நடவடிக்கையாக, கட்சியின் பாடல்கள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. இந்த விழாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார்.
#Nammavar #KamalHaasan At #IdhuNammavarPadaiSongs Release Event !#IdhuNammavarPadai @ikamalhaasan @sripriya pic.twitter.com/iObBwrAqar
— Diamond Babu (@diamondbabu4) June 25, 2018
மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களை கட்சி பணிகளுக்கு அழைக்கும் விதமாகவும், அன்றாட நாட்டு நடப்புகளில் மக்கள் நீதி மய்யத்தின் கூர்நோக்கு பார்வை உள்பட பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய 6 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Guests & MNM officials at #Nammavar #KamalHaasan ‘s #MakkalNeedhiMaiam ‘s #IdhuNammavarPadaiSongs release event.
Lyrics are penned by poet #Snehan #IdhuNammavarPadai #MNM @ikamalhaasan @maiamofficial @sripriya @snekans_offl pic.twitter.com/TTfxsnh6i0— Diamond Babu (@diamondbabu4) June 25, 2018
இந்த பாடல்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளரான கவிஞர் சினேகன் எழுதி இருக்கிறார். இந்த பாடல்களுக்கு தாஜ்நூர் இசை அமைத்து இருக்கிறார்.
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.