குழந்தையை கொடூரமாக தாக்கும் பெண்... மனதை பதபதக்க வைக்கும் வீடியோ!

மலேசியாவில் 6 வயது மதிக்கத்தக்க குழந்தையை பெண் ஒருவர் ஸ்கேலால் கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலலாக பரவியது. இதையடுத்து அந்த குழந்தையை தாக்கிய அந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்தனர்.

மலேசியாவில் உள்ள புச்சாங் பர்டானாவில் தான் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை சாப்பிடும் போது உணவை கீழே சிந்தியதற்காக அந்த பெண் இவ்வாறு கொடூரமாக அடிக்கிறார் என்பது இந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. வலியால் அந்த குழந்தை துடிக்கும் காட்சி நெஞ்சை பதபதக்க வைக்கிறது. 2 நிமிடங்கள் 49 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் அந்த சிறு குழந்தையை பெண் ஒருவர் மூர்கத்தனமாக தாக்கும் செயல் மனதை பதற வைக்கிறது. மேலும், அந்த குழந்தையை காலால் எட்டி உதைக்கவும் செய்கிறார் அந்தப் பெண்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, அந்தப் பெண்ணின் விலாசத்தை கண்டுபிடித்த மலேசிய போலீஸார் அவரை கைது செய்தனர்.

குறிப்பாக அந்த பெண் தமிழில் சரளமாக பேசுகிறார் என்பதால் அவர் தமிழகத்தில் இருந்து அங்கு சென்று வசிக்கிறாரா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.

×Close
×Close