அடுத்து வைரலாகும் மலையாள பாடல்! மணிக்ய மலரய பூவி...! யார்யா இந்தப் பொண்ணு?

விரைவில் வெளிவரவுள்ள 'ஒரு அடார் லவ்' எனும் மலையாள படத்தில் இடம்பெற்றுள்ள 'மணிக்ய மலரய பூவி' எனும் பாடல் தற்போது வைரல்

கடந்து ஆண்டு மோகன்லால் நடித்த மலையாள படமான ‘வெளிப்படிந்தே புஸ்தகம்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல், தமிழகத்தின் இளசுகளிடையே மெகா ஹிட் அடித்தது. அதில் ஆடிய பெண்கள், குறிப்பாக, முதல் வரிசையில் ஆடிய இரு பெண்களுக்கு ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிலையில், விரைவில் வெளிவரவுள்ள ‘ஒரு அடார் லவ்’ எனும் மலையாள படத்தில் இடம்பெற்றுள்ள ‘மணிக்ய மலரய பூவி’ எனும் பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது. பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகி உள்ளனர்.

இந்த பாடல் வைரல் ஆனதற்கு மிக முக்கிய காரணம், ஒரு மாணவி தான். அதை வீடியோவைப் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மீம்ஸ், வீடியோ மீம்ஸ் என இப்போது வைரல் ஆகிக் கொண்டிருப்பது இந்தப் பெண் தான். அதுமட்டுமில்லை, ட்விட்டரில் தொடர்ந்து நம்பர்.1 டிரெண்டிங்கில் இருப்பதும் இந்த வீடியோ தான்.

×Close
×Close