‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘நீதானே’ பாடலின் வீடியோ

‘நீதானே’ பாடலின் ஒரு நிமிட வீடியோ இது. ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

By: November 16, 2017, 10:37:15 AM

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படம், கடந்த தீபாவளிக்கு வெளியானது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவுசெய்து தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கும் மேல் இதுவரை வசூல் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீதானே’ பாடலின் ஒரு நிமிட வீடியோ இது. விவேக் எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Neethanae video song from mersal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X