நயன்தாராவை சந்தோஷப்படுத்த விஜய் சேதுபதி செய்யும் வேலைகள்.. வெளியானது வீடியோ

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் அழகிய தருணங்கள்

நயன்தாரா-அதர்வா நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்’. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  நீயும் நானும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

நீயும் நானும் :

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். மேலும் அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நீயும் நானும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது விஜய் சேதுபதி – நயன்தாரா ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. கதைப்படி விஜய் சேதுபதியும் நயன் தாராவும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் அழகிய தருணங்கள் பாடலில் இடம் பெற்றுள்ளன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close